மாநகராட்சி, நகராட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடக்கும்?  - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 17, 2019

மாநகராட்சி, நகராட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடக்கும்? 

தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு எப்ேபாது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து, மாநிலத் தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:



 உச்சநீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றுவதாகக் கூறி, தமிழகத்தில் ஊராட்சிகள், ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவது தொடர்பாக டிச. 9ல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை.


  எனவே, மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 15 நாட்களுக்குள் நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.



 அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், மாநில தேர்தல் ஆணைய வக்கீல் ராஜா கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி, ‘‘தமிழகத்திலுள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’’ என கூறினர்.


 இதையடுத்து, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படுமென்பது குறித்து மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 23க்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment