திருச்சியில் சுகாதாரமற்ற முறையில், கால்களால் மிதித்து பானி பூர் தயார் செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர்.
திருச்சி மாவட்டம் தேவதானம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், 5 வீடுகளை வாடகைக்கு எடுத்து பானிபூரி தயாரித்து மொத்த விற்பனை செய்து வந்தனர்.இந்த பானி பூரி நிறுவனத்தை, வடமாநிலத்தைச் சேர்ந்த கமல்சிங், ராஜு ஆகியோர் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், சுகாதாரமற்ற முறையில், பூரி மாவை காலில் மிதித்து தயாரிக்கிறார்கள் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன.
இதையடுத்து நேற்றைய தினம் உணவு பாதகாப்பு அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்
சோதனையின் போது, சுகாதாரமற்ற முறையில் தரையில் வைத்து உணவுகள் சமைக்கப்பட்டதும், ஆங்காங்கே எலிகள் ஓடி கொண்டிருந்ததையும் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மற்றொரு அறையில் பானி பூரி மாவை சிலர் காலால் மிதித்து தயார் செய்து வந்துள்ளனர்.
அழுகிய நிலையில் உருளைக்கிழங்குகள், வண்டுக்கள் நிறைந்த மைதா இவைகளை கண்டஅதிகாரிகள் உடனடியாக அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பானிபூரி தான் திருச்சியில் 90 சதவீதம் விற்பனையாளர்கள் வாங்கி விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment