நீட் நுழைவுத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 1, 2019

நீட் நுழைவுத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


பிளஸ்2 முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது


. நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் மருத்துவப்படிப்புகளுக்கான இடம் ஒதுக்கப்படுகிறது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு அடுத்தாண்டு மே மாதம் 3ஆம் தேதி நீட் நுழைத் தேர்வு நடைபெற உள்ளது.


 இந்த தேர்வுக்கு இன்று முதல் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரைwww.nta.ac.in, ntaneet.nic.in என்ற இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

 பொதுப்பிரிவினருக்கு ரூ.1,500, ஓபிசி, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 1,400,எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளி, திருநங்கைகளுக்கு ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பத்துக்கான கட்டணத்தை செலுத்த ஜனவரி 1 வரைஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்துடன் ஜிஎஸ்டி சேவை கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது


.நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதிக்குள் வெளியிட தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment