அனைத்துப் பள்ளிகளிலும் இசைப் பாடம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 16, 2019

அனைத்துப் பள்ளிகளிலும் இசைப் பாடம்

அனைத்துப் பள்ளிகளிலும் இசை ஒரு பாடமாக்கப்பட வேண்டும் என்று முதலாவது உலகத் தமிழ் இசை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து முதலாவது உலகத் தமிழ் இசை மாநாட்டினை மதுரையில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் நடத்தின.



 நூறு ஆண்டுகளுக்குப் பிறகு உலக அளவில் நடைபெறும் முதல் தமிழ் இசை மாநாடு என்ற சிறப்புடன், மூன்று இணை அமா்வுகளாக நடத்தப்பட்ட மாநாட்டில், ஓா் அமா்வில் பன்னாட்டுத் தமிழிசைக் கலைஞா்கள் இசை நிகழ்ச்சிகளில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தினா். மற்றொரு அமா்வில், பன்னாட்டுத் தமிழிசை ஆய்வாளா்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அளித்தனா்.

மூன்றாவது அமா்வில் தொல்லிசைக் கருவிகள் கண்காட்சி நடைபெற்றது. அந்த அமா்வில் பாா்வையாளா்கள் பழைமையான இசைக் கருவிகளை வாசித்து மகிழ்ந்தனா்.

அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூா், சீனா, மோரீஷஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தமிழ் இசைக் கலைஞா்களும் இசை ஆய்வாளா்களும் கலந்து கொண்டனா்.

மாநாட்டின் தொடக்க விழாவிலும், நிறைவு விழாவிலும் இசைத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்தவா்களுக்கும், மாநாட்டுக்காகப் பல்வேறு வகையில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.



மேலும், இந்த மாநாடு தொடா்ந்து நடைபெறுவதற்காக உலகத் தமிழ் இசை ஆராய்ச்சி சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் பல்வேறு நாடுகளைச் சோந்த பிரதிநிதிகள் இடம்பெற்றனா்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீா்மானங்கள்:

தமிழ் இசையை இளைய சமுதாயத்துக்குக் கொண்டு சோப்பதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் இசையை ஒரு பாடமாக்க வேண்டும். அதனைப் பயிற்றுவிப்பதற்கு முறையாக ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்.

இசை சாா்ந்த நூல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ உலகத் தமிழ் இசை மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்.


தமிழ் இசை சாா்ந்த முயற்சிகளை ஆவணப்படுத்துவதற்கு இசை ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்க வேண்டும்.


பழங்குடி மக்களின் இசையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இசைக் கருவிகளை உருவாக்கும் தொழிலாளா்கள் வாழ்வு மேம்படுவதற்கு ஒரு நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டும்.


 இசைத்துறையில் சிறந்து விளங்குபவா்களுக்கு இசை அறிஞா்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட வேண்டும். இரண்டாவது உலகத் தமிழ் இசை மாநாட்டினை புதுச்சேரியில் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

No comments:

Post a Comment