இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது:வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, December 13, 2019

இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது:வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... அதிரடி அறிவிப்பால் அதிர்ந்து போன வாடிக்கையாளர்கள்..


சமூகவலைதளங்களில் தற்போது வாட்ஸ்அப் என்ற செயலி இன்றியமையாத ஒரு இடத்தை வகித்துள்ளது. முகநூல், ட்விட்டரை விட அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ்அப் தான்.


 இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் சில மாடல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் வேலை செய்யாது என வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது


ஆண்ட்ராய்டு 2.3.7 இயக்க முறைமை மற்றும் அதற்கு முந்தய ஓஎஸ் கொண்டு இயங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களிலும், ஐஓஎஸ் 8 மற்றும் அதற்கு முந்தைய ஓஎஸ்களிலும்,அனைத்து விண்டோஸ் போன்களிலும் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் வேலை செய்யாது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



இதுமட்டுமின்றி, ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 உள்ளிட்ட KaiOS 2.5.1+ ஓஎஸ் கொண்ட போன்களிலும் வாட்ஸ் அப்பின் சேவை நிறுத்தப்படவுள்ளது.


 மேற்கண்ட மாடல் போன்கள் வைத்திருந்தால் உடனடியாக உங்கள் வாட்ஸ் அப் தகவல்களை Export செய்யுங்கள் இல்லையென்றால் செல்போனை மாற்றுங்கள்.

No comments:

Post a Comment