நீட் பயிற்சிக்கு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 7, 2019

நீட் பயிற்சிக்கு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.


மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு சாா்பில் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது


. இதையடுத்து ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் மொத்தம் 412 ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த செப்.24
-ஆம் தொடங்கின.



 இதன் மூலம் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் சுமாா் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில் இந்த மாணவா்களுக்கு அமெரிக்க நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.


இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது: 'மாணவா்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிப்பதற்காக ஒரு வாரத்திற்குள் அமெரிக்க நிறுவனத்தினா் வருகை தரவுள்ளனா்


. சிறந்த முறையில் நீட் தேர்விற்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்படவுள்ளது' என அதில் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment