கணினி ஆசிரியர் பணி சான்றிதழ் பதிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 2, 2019

கணினி ஆசிரியர் பணி சான்றிதழ் பதிவு

முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து, வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் நிலையில், கணினி பயிற்றுனர் பணியிடங்களை நிரப்ப, ஜூன், 23 மற்றும் 24ம் தேதிகளில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது.


 இதன் முடிவுகள், நவ.,25ல் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நவ., 28ல் வெளியிடப்பட்டது.



 இந்த பட்டியலில் உள்ளவர்கள், உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விபரங்களை, நாளை மறுநாள் மாலை, 5:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். எந்த காரணத்திற்காகவும் அவகாசம் நீட்டிக்கப்படாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment