உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர் கையில் மை வைப்பது எப்படி?  - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 17, 2019

உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர் கையில் மை வைப்பது எப்படி? 

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களின் கையில் மை வைப்பது எப்படி என்பது ெதாடர்பாக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி நடத்தப்படுகிறது.



இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி நிறைவடைந்தது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது.


 இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் நாளை மாலை 3 மணிக்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களின் கையில் எவ்வாறு மை வைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



 இதன்படி ஊரக பகுதிகளில் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு அளிப்பதற்கு முன்பாகவும், நகர்புறங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு செல்வதற்கு முன்பாகவும் வாக்காளர்கனின் கையில் மை வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதன்படி வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலின் முதல் இணைப்பிலிருந்து நகம் முடியும் வரை மை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மாதிரி புகைப்படம் அனைத்து அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment