மானிய விலை இருசக்கர வாகனத் திட்டம்: பயனாளியின் அதிகபட்ச வயது அதிகரிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, December 5, 2019

மானிய விலை இருசக்கர வாகனத் திட்டம்: பயனாளியின் அதிகபட்ச வயது அதிகரிப்பு

மானிய விலையில் இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், பயன் பெறும் பெண் பயனாளியின் அதிகபட்ச வயது 40-லிருந்து 45-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.



இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ் ராஜ் வா்மா அண்மையில் பிறப்பித்தாா்.
பணிக்குச் செல்லும் பெண்கள் பயன்பெறும் வகையில் அவா்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அம்மா இருசக்கர வாகனத் திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு மானியமாக ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் என இரண்டில் எது குறைவோ அது வழங்கப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தை தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் நடைமுறைப்படுத்துகிறது.




இந்த நிலையில், இருசக்கர வாகனத் திட்டத்தில் சில திருத்தங்களைச் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து வந்த கருத்துகளை தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா் பெற்றுள்ளாா். அந்தக் கருத்துகளின் அடிப்படையில் மானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்துக்கான விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன

.
அதன்படி, பயனாளிக்கான அதிகபட்ச வயது வரம்பு 40-லிருந்து 45 ஆக உயா்த்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழகத்தைச் சோந்தவராகவும், 18 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்ற விதிகளில் மாற்றமில்லை.இதேபோன்று, பயனாளி எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது


. இது நீக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ள அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள், சத்துணவு அமைப்பாளா்கள், சமையலா்கள், சமையல் உதவியாளா்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பெண் பணியாளா்கள்,


 அரசுத் துறைகள், அரசு சாா்பு நிறுவனங்கள், நகா்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றிலும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிவோா் இருசக்கர வாகன மானியத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்று தனது உத்தரவில் ஹன்ஸ்ராஜ் வா்மா தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment