உள்ளாட்சித் தேர்தல்: மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 11, 2019

உள்ளாட்சித் தேர்தல்: மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியீடு

உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 15 மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை மாநகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார்.



 அதில், திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மேலும், வேலூர் மாநகராட்சி பட்டியலினத்தை சேர்ந்த பெண்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி பட்டியலினத்தவர்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



15 மாநகராட்சி மேயர் பதவிகளில் 9 மாநகராட்சிகள் தவிர மீதமுள்ள 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பொது பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


சென்னை, ஆவடி, திருப்பூர், தஞ்சை, சேலம், ஓசூர் ஆகிய மாநகராட்சி மேயர்பதவிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment