உலகின் சக்திவாய்ந்த பெண்களின் வரிசையில் நமது தமிழகத்து பெண்மணி: பெருமை கொள் தமிழகமே ! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, December 13, 2019

உலகின் சக்திவாய்ந்த பெண்களின் வரிசையில் நமது தமிழகத்து பெண்மணி: பெருமை கொள் தமிழகமே !

மதுரையில் பிறந்து, திருச்சியில் வளர்ந்து, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன், மோடி அரசில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.


2006 ஆம் ஆண்டு பா.ஜ.க வில் இணைந்து, செய்தி தொடர்பாளர், இணை அமைச்சர், முதல் முழு நேர பெண் பாதுகாப்பு துறை அமைச்சர், முதல் முழு நேர பெண் நிதி அமைச்சர் என்று பத்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை கண்டவர்.



எந்த பணபலமும், அரசியல் பின்புலமும் இல்லாமல் திறமையால் மட்டும் முன்னுக்கு வந்தவர். எதிர்கட்சிகளை கையாள்வதில் மிகவும் திறமைசாலி என்று பெயர் எடுத்தவர்.


மே 2019 ஆம் ஆண்டு நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். கார்பொரேட் வட்டி குறைப்பு, வங்கிகள் இணைப்பு போன்ற மிக பெரிய சீர்திருத்தங்களை குறுகிய காலத்தில் மேற்கொண்டவர்

இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்திய முழுவதும் பயணித்து மக்கள், வியாபாரிகள், வணிகர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டு முடிவுகளை எடுத்து வருகிறார்.



நேற்று உலகின் சக்திவாய்ந்த பெண்கள் வரிசையை பிரபல போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் 34வது இடத்தை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

 எலிசபெத் ராணி, டிரம்பின் மகள் இவங்க டிரம்ப், நியூஸிலண்ட் பிரதமர் ஆகியோரை முந்தியுள்ளார். உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக இந்திய உருவாகிறது என்பதையே இது காட்டுகிறது.

இதே நிறுவனம் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த அரசியல் பெண் தலைவர்களில் 7வது இடத்தை பெற்றுள்ளார்.


உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடத்திலும் இங்கிலாந்து ராணி எலிசபெத் 40வது இடத்திலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலின் முதல் இடத்தில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கிள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

முதல் இடத்தில் ஜெர்மனி Chancellor ஏஞ்செலா மேர்க்கெல் தொடர்ந்து 9 வருடங்களாக உள்ளார். உலகின் சக்திவாய்ந்த பெண்ணாக முதல் முறையாக ஒரு தமிழச்சி பிடித்திருப்பதால் பெருமை கொள்கிறது தமிழகம் !

No comments:

Post a Comment