கல்விக்கடன் ரத்து இல்லை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 9, 2019

கல்விக்கடன் ரத்து இல்லை

கல்வி கடன்களை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



கல்விக் கடன் ரத்து செய்வது தொடர்பாக பார்லி கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், கடந்த மூன்று நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்பி வரவேண்டிய கல்விக் கடன் ரூ. 75,451 கோடி அதிகரித்துள்ளது.



 இதிலும் சுமார் 10 சதவீதம் வாராக்கடனாக பட்டியலிடப்பட்டுள்ளது.கல்வி கடனை திருப்பி செலுத்தும் விவகாரத்தில், வங்கிகள் அளித்த அழுத்தத்தால், பல தற்கொலைகள் நடந்ததாக வெளியான செய்திகள் தவறானவை.


 கல்விக் கடனை திரும்ப வசூலிப்பதில், மென்மையான போக்கை கையாள வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment