ஜியோ நிறுவனம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான ஆரம்ப ரீசார்ஜ் கட்டணத்தை மீண்டும் மாற்றியுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு நிறுவன சந்தைகளில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றம் காரணமாக ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் சலுகை கட்டணங்களை உயர்த்தின.
இதனால் கடும் அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்களுக்கு மாற முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர்களை தக்கவைக்க 3 நிறுவனங்களும் போட்டி போட்டு சலுகைகள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் ஜியோவின் நிறுவனம் தனது கட்டணத்தை மாற்றியுள்ளது. அதன்படி ஜியோவின் ஆரம்ப ரீசார்ஜ் தொகை ரூ.49லிருந்து ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஜியோவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேலும் அடிக்கடி கட்டணங்களை மாற்றுவதால் அவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த புதிய ரூ. 75 கட்டணத்தில் மற்ற நெட்வொர்கிற்கு அழைக்க 500 இலவச நிமிடங்கள், 3 ஜிபி டேட்டா, 50 எஸ்.எம்.எஸ். ஆகியவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. மேலும் இந்த சலுகையில் தினமும் 100 எம்.பி அதிவேக இண்டர்நெட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment