ஆங்கிலவழி வகுப்பு சாத்தியமா? : ஆய்வறிக்கை சமர்ப்பிக்க இயக்குனரகம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 15, 2019

ஆங்கிலவழி வகுப்பு சாத்தியமா? : ஆய்வறிக்கை சமர்ப்பிக்க இயக்குனரகம் உத்தரவு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் அறிக்கை சமர்ப்பிக்க ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:



 ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என மாவட்ட அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆங்கிலவழி கல்வி தொடங்குவதற்கு தனியாக நிதி எதுவும் ஒதுக்கப்படாது. புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்.



ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களை கொண்டே ஆங்கிலவழிக் கல்வியை வகுப்புகளையும் நடத்த வேண்டும். அவ்வப்போது கல்வித்துறையின் மூலம் பிறப்பிக்கப்படும் ஆணைகளுக்குட்பட்டு ஆங்கிலவழிக் கல்வி வகுப்புகளை நடத்த வேண்டும்.


இதுதொடர்பான ஆய்வறிக்கையை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்துக்கு விரைவாக அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment