இரண்டு ஆண்டு டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கிடையாது என கல்வித் துறை உத்தரவிட்டதால் 2017-18, 2018-19-ல் பிளஸ்-2 முடித்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு 2011 முதல் இலவச மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அவர் மறைந்ததில் இருந்து இத்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல் தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன
இதனால் 2017-18, 2018-19-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்தவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து முதற்கட்டமாக 2018-19-ம் கல்வியாண்டில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2017-18-ம் கல்வி ஆண்டில் படித்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அவர்கள் உயர் கல்வி பயின்றால் மட்டுமே பெற முடியும். அதிலும் 2 ஆண்டுகள் பயிலும் டிப்ளமோ படிப்புகளுக்கு வழங்கக் கூடாது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ, கல்லூரிகளில் பட்டப் படிப்பு, தொழிற்கல்வி படிப்பதற்கான சான்று பெற்ற பிறகே மடிக்கணினி வழங்க வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதனால் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 முடித்த பலருக்கு மடிக்கணினி கிடைக்காததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது: தற்போது பிளஸ் 1, பிளஸ்-2 பயில்வோருக்கு மடிக்கணினி வழங்கிவிட்டனர். ஆனால் 2017-18, 2018-19-ல் முடித்தோருக்கு தற்போதுதான் வழங்குகின்றனர்.
அதை பெறுவ தற்கு கல்லூரியில் படிப்பதற்கான சான்று கேட்கின்றனர். அதிலும் 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப் போருக்கும், அஞ்சல்வழியில் பட்டப்படிப்பு படிப்போருக்கும் மடிக்கணினி இல்லை என்கின்றனர். எங்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுகின்றனர், என்று கூறினர்.
கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மூன்று ஆண்டுகள் டிப்ளமோ, பட்டப்படிப்பு படிப்போ ருக்கு மட்டுமே மடிக்கணினி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் உயர்கல்வியில் படிப்பதற்கான சான்று பெற்று மடிக்கணினி வழங்கி வருகிறோம்.
மாணவர்கள் புகார்
இதற்கிடையே மற்றவர்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கும் மடிக்கணினி கேட்டு கடிதம் அனுப்பி யுள்ளோம்' என்று கூறினார்.
Source: The Indhu Tamil

இந்த தகவலுக்கு நன்றி 🙏
ReplyDeleteஇதேபோல் எனது குடும்பத்தில் இந்த வருடம் 12ம் வகுப்பு முடித்து குடும்ப சூழ்நிலை காரணமாக, மேற்படிப்பு படிக்க முடியாமல் அடுத்த ஆண்டு படிக்காலாம் என்று நினைக்கும் போது.இவருக்கு லேப்டாப் கிடைக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Bonafide farm இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்றனர் 🤔
இவருக்கு லேப்டாப் கிடைக்க வாய்ப்பு வழி உள்ளதா