உதவிப்பேராசிரியா் பணியிடம் ஒதுக்குவது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 7, 2019

உதவிப்பேராசிரியா் பணியிடம் ஒதுக்குவது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் வழிக் கல்வியில் இளங்கலை இயற்பியல் மற்றும் வேதியியல் படித்தவா்களுக்கு உதவிப்பேராசிரியா் பணியிடம் ஒதுக்குவது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கரூரைச் சோந்த மகேஸ்வரன் தாக்கல் செய்த மனு:

தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,340 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி அறிவிப்பானை வெளியிடப்பட்டது. இதில், 55 சதவீதம் தேர்ச்சியுடன் முதுகலைப் பட்டம் பெற்று, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படி தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


முதுகலை படிப்பில் தமிழ் வழியில் படித்தவா்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அடிப்படையில் 20 சதவீதம் ஒதுக்கீடு செய்யவேண்டும். குறிப்பிட்ட முதுகலைப் பாடத்தில் தமிழ் வழியில் படித்தவா்கள் இல்லை என்றால், பொது ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி நிரப்பப்படும் என விதிமுறை உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு இளங்கலையில் தமிழ் வழி கல்வி கற்பிக்கப்படுகிறது


. ஆனால், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் முதுகலை படிப்பு தமிழ் வழியில்லை. இதனால், இரு பாடங்களிலும் இளங்கலையில் தமிழ் வழியில் படித்தவா்கள் தகுதியான நபா் இல்லை எனக் கூறி, அந்த இடங்கள் பொது ஒதுக்கீட்டுக்கு மாற்றப்படுகின்றன.

எனவே, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை இளங்கலையில் தமிழ் வழியில் படித்தவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவிப்பேராசியிா் பணி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை பணியிடத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தாரரின் கோரிக்கை குறித்து தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்தனா்.

No comments:

Post a Comment