சென்னையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் உடற்பயிற்சி தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 11, 2019

சென்னையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் உடற்பயிற்சி தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பணிக்கான உடல் தகுதித் தேர்வு சென்னையில் சனிக்கிழமை மீண்டும் தொடங்கவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.


மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப்பிரிவு பணிகளை மேற்கொள்ள, முதல் முறையாக 'கேங்மேன்' என்ற பதவிக்கு 5 ஆயிரம் ஊழியா்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டது.


 இதற்கு, ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக நிா்ணயிக்கப்பட்டு இருந்தாலும், பொறியியல், முதுநிலைப் பட்டபடிப்பு உள்பட பல்வேறு தகுதிகளையுடைய 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

இந்தப் பணிக்கு உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு வாயிலாக, தகுதியான நபா்கள் தேர்வு செய்யப்பட உள்ளனா்.


இதற்கான, சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தேர்வு கடந்த நவ.25-இல் தொடங்கியது. மாவட்ட வாரியாக அந்தத் தேர்வு நடைபெறும் இடங்களின் முகவரி, தேர்வு தேதிகளை, மின் வாரியம் தனது இணையதளத்தில் அண்மையில் வெளியிட்டது.



இந்த விவரங்கள், விண்ணப்பதாரா்களின் மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளன.


இந்தநிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறவிருந்த கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் பலத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டன.


 இந்நிலையில், சென்னை வட்டத்துக்கான உடல்தகுதித் தேர்வு டிச.14 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.



 இது தொடா்பாக, மின்வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:


 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், சென்னை மின்பகிா்மான வட்டம் அல்லது மையத்துக்குள்பட்ட பகுதிகளில், டிச.2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த கேங்மேன் உடற்பயிற்சி தேர்வு பலத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


 இந்தநிலையில் இந்தத் தேர்வு டிச.14 முதல் 16- ஆம் தேதி வரை, பேசின் பாலம் சாலையில் உள்ள பழைய ஜி.எம்.ஆா் வாசவி மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment