வருட இறுதியை ஒட்டி ட்விட்டர் வெளியிட்டுள்ள இந்திய டாப் டென் ஹாஷ்டேக்குகளில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டும் இடம் பிடித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நிறைவடையும் தருவாயில் இந்திய அளவில் ட்விட்டரில் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும்ஹாஷ்டேக்குகள் என பல்வேறு பட்டியல்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய டாப் டென் ஹாஷ்டேக்குகளில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டும் இடம் பிடித்துள்ளது.
இந்த ஹாஷ்டேக்குகளின் பட்டியலில் முதல் இடத்தில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான ஹாஷ்டேக் உள்ளது. தொடர்ந்து சந்திரயான் - 2, இரண்டாவது இடத்திலும் , உலக கோப்பை கிரிக்கெட், புல்வாமா, சட்டப்பிரிவு 370, ஆகியவையும் அடுத்தடுத்த இடம்பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தில் நடிகர் விஜய்யின் பிகில் படம் தொடர்பான ஹாஷ்டேக் இடம்பிடித்துள்ளது. அடுத்து சினிமா தொடர்பாக அவஞ்சர் என்ட் கேம் என்ற ஹாலிவுட் படம் இடம்பெற்று உள்ளது.இந்த ட்வீட்டை நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ரீ ட்விட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment