நேர்முகத்தேர்வில் மோசடியா?: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, December 12, 2019

நேர்முகத்தேர்வில் மோசடியா?: விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி

.என்.பி.எஸ்.சி. நடத்த உள்ள நேர்முகத்தேர்வில் மோசடி நடைபெற இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தேர்வாணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.


குரூப் 1க்கான நேர்முகத்தேர்வில் மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாக ‌மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தேர்வாணையத்தின் மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பாக ‌வைகோ அறிக்கை வெளியிட்டிருப்பதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.


நேர்முகத் தேர்வில் வல்லுநர் குழுவினால் கலந்தாலோசிக்கப்பட்டு ஒருமித்த முடிவாக மட்டுமே மதிப்பெண் வழங்கும் முறை உள்ளது என்றும், அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண் கணினி வழியே மதிப்பீடு செய்யும் வகையில் பேனா மையினால் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது எனவும் டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது

எனவே இதுகுறித்து, தேர்வர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment