அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு பதிவுக்கு ஏற்பாடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 9, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு பதிவுக்கு ஏற்பாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது



.நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, மே, 3ல் நடக்கும், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, இம்மாதம், 2ம் தேதி துவங்கியது; வரும், 31ல் முடிகிறது.


இந்த தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய, அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, உதவிகளை செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.



பதிவு செய்த மாணவர்களின் விபரங்களையும், தலைமை ஆசிரியர்கள் பள்ளி வாரியாக சேகரித்து வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment