வங்கியில கடன் வாங்க போறீங்களா.. இன்னும் கொஞ்சம் பொறுங்க..... வட்டி குறைய வாய்ப்பு இருக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, December 5, 2019

வங்கியில கடன் வாங்க போறீங்களா.. இன்னும் கொஞ்சம் பொறுங்க..... வட்டி குறைய வாய்ப்பு இருக்கு

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்வை ஆய்வறிக்கை கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும்


. அந்த கூட்டத்தில்தான் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி முடிவு எடுக்கும். இந்த ஆண்டில் இதுவரை முக்கிய கடனுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) 1.35 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.


 மந்தகதியில் இருக்கும் பொருளாதாரத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.இந்நிலையில் கடந்த செப்டம்பர் காலாண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக சரிவு கண்டது. 



அதனால் இந்த முறையும் வட்டி குறைப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் என பெரும்பாலான நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த 3ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டம் தொடங்கியது. 



இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடுவார்.ரிசர்வ் வங்கி பெரும்பாலும் கடனுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) குறைக்க வாய்ப்புள்ளதால், யாரெல்லாம் வங்கிகளில் கடன் வாங்கணும்ன்னு நினைச்சிங்களோ அவங்க எல்லாம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸின் அறிவிப்பை கேட்ட பிறகு முடிவு எடுங்க

No comments:

Post a Comment