அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள்: முன்னாள் நீதிபதி தலைமையில் குழு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, December 13, 2019

அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள்: முன்னாள் நீதிபதி தலைமையில் குழு!

அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமை யில் புதிய குழுவை தமிழக அரசு அறிவித்துஉள்ளது.


 இந்த குழு, 4 மாதங்களுக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டு உள்ளது.



தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஒரே கேடர் அதிகாரிகளுக்கு ஊதியம் விகிதம் முரண்பாடாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதை களைந்து, சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துவருகின்றன.


இந்த நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோது, இந்த பிரச்சினை மேலும் வலுவானது அதையடுத்த ஒருநபர் கமிஷன் அமைத்து தமிழகஅரசு விசாரணை நடத்தியது.


ஆனால், அதில் திருப்தி அடையாத அரசு ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த நவம்பர் 28-ம் தேதி வெளியானது. அப்போது, ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய குழு அமைக்க தமிழகஅரசு உத்தரவிட்டது.


இதையடுத்து, தற்போது தமிழகஅரசு, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் கே.பணீந்திரரெட்டி, ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர்,. அரசின் 20 துறைகளை சேர்ந்த 52-க்கும் மேற்பட்ட தர ஊதியங்கள் அடிப்படை யிலான ஊதிய முரண்பாடுகள் குறித்து புதிய பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும், இந்த குழு ஏற்கனவே ஒருநபர் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களை மீண்டும் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் புதிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.


மேலும், ஊதிய முரண்பாடுகள் தொடர்பான அறிக்கையை 4 மாதங்களுக்குள் தமிழகஅரசு வழங்க வேண்டும் என்றும் என்று தெரிவித்து உள்ளது.

இதற்கான அரசாணையை நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டு உள்ளார்.

Source:Patrikkai.com

No comments:

Post a Comment