தமிழக ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 14, 2019

தமிழக ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் கடந்த ட்விட்டரில் வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் தங்கள் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.


கிரிக்கெட் சாம்பவானான சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.


 அதில், நான்தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்த போது, காபி கேட்டேன் அப்போது ஒரு ஊழியர் எனக்கு காபி கொண்டு வந்தார். அவர் என்னிடம்கிரிக்கெட் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.


நான் கேட்டபோது, நீங்கள் முழங்கைத் தடுப்பைப் பயன்படுத்தும்போதுஉங்களுடைய பேட்டின் ஸ்விங் மாறுகிறது என்றார். நான் அவரிடம்,இந்த உலகத்தில் நீங்கள் மட்டும்தான் அதைக் கண்டுபிடித்துள்ளீர்கள் என்றேன்.

அதன்பிறகு என்னுடைய முழங்கைத் தடுப்பின் வடிவத்தை மாற்றிக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.


மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன.


சென்னை டெஸ்ட் தொடரின் போது தாஜ் கோரமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய முழங்கைத் தடுப்பு பற்றி கூறிய ஆலோசனைக்குப் பின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரைச் சந்திக்க ஆசைப்படுகிறேன். கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன

சென்னை டெஸ்ட் தொடரின் போது
Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்

அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்

No comments:

Post a Comment