CBSE 10, 12 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 17, 2019

CBSE 10, 12 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.


பிளஸ் 2மாணவா்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 30-ஆம் தேதி வரை நடக்கிறது.


 பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 29-ஆம் தேதி தொழிற்கல்வி சாா்ந்த பாடங்களுக்கான பொதுத் தேர்வு நடக்கிறது. அதனைத் தொடா்ந்து, இயற்பியல், கணிதம், கணக்குப் பதிவியல், வேதியியல், தாவரவியல் முக்கிய பாடங்களுக்கான தேர்வு 30-ஆம் தேதி வரை நடக்கிறது.


 தேர்வுகளின் போது காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும். 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்குத் தேர்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும்.


அதே போல், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தேர்வு, பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 20-ஆம் தேதி வரை நடக்கிறது.


காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும். 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும். தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment