FastTag எப்படி பெறுவது? பயன்படுத்துவது? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 4, 2019

FastTag எப்படி பெறுவது? பயன்படுத்துவது?

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர்கள் சுங்கச்சாவடி கட்டணத்தை பணத்தின் மூலம் செலுத்து வந்தனர். இதனால், நேரம் அதிகமாகி, வண்டிகள் வரிசையில் நின்றுக்கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டு வந்தது. நேர விரயத்தை தடுப்பதற்காக மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் FastTag திட்டத்தை அறிமுகப்படுத்தியது.


அதற்காக FastTag அட்டை பயன்படுத்தப்படுகிறது. அந்த பார்கோடு அடங்கிய அந்த அட்டையை வாகனத்தில் முன்பக்கத்தில் ஒட்டிவிட்டால், சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்கும்போதே, ரேடியோ அலைவரிசை தொழில் நுட்பத்தின் அடிப்படையில், அந்த அட்டையின் மூலம் பணம் செலுத்தப்பட்டு விடும். இனி மனித உழைப்புக்கு சுங்கச்சாவடிகளில் வேலை இல்லை.

FastTag அட்டை என்பது, ஸ்டிக்கார் போல் இருக்கும்.

இந்த ஸ்டிக்கரை ரூ.100 கட்டணமாக பெற்று வங்கிகளில் வாங்கிக்கொள்ளலாம். அதன்பின்னர் ரீசார்ஜ் செய்ய வேண்டும். பாஸ்டேக் ஸ்டிக்கரை ஆக்டிவேட் செய்து தர 22 முக்கிய வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Myfasttag ஆப் -ஐ பிளே ஸ்டோரிலும்,ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோரிலும் டவுன்லோடு செய்யலாம்.


FASTag அட்டையை ப்ரீபெய்ட் வாலட் ஆகவோ அல்லது டெபிட்/ கிரெடிட் கார்டு கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த நமது வங்கிக்கணக்கில் இணைத்துக்கொண்டால், நாம் ரீசார்ஜ் செய்யத்தேவையில்லை. அதற்குப்பதிலாக, நாம் ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடியை கடக்கும்போதும், நமது வங்கி கணக்கில் இருந்து சுங்க கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு விடும்.

FASTag அட்டையை பெறுவதற்கு வாகனத்தின் ஆர்.சி. புக் நகல், இருப்பிடம் மற்றும் அடையாளச் சான்று நகல்கள், பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவை கட்டாயம் வேண்டும். பாஸ்டேக் ஸ்டிக்கர் 5 ஆண்டுகள் வரை செல்லத்தக்கது.


FASTag அட்டை, 5 ஆண்டுகள் காலம் வேலிடிட்டி உடையது. தேவையானபோது ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். FASTag அட்டை,இல்லாத வாகனங்கள் பிரத்யேக FASTag பாதையில் நுழைந்தால் இரு மடங்கு கட்டணம் செலுத்தவேண்டும்.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் FASTag அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், 15 நாட்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment