IDBI வங்கியில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, December 6, 2019

IDBI வங்கியில் வேலை

எல்ஐசியின் ஒரு அங்கமான ஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 61

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Agriculture Officer Gr.B - 40

தகுதி: Agriculture,Horticulture, Veterinary Science,Fisheries, DairyTechnology & Animal Husbandry போன்ற ஏதாவதொரு துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Transaction Monitoring Team - Head (Grade D) - 01

தகுதி: CA,MBA அல்லது Certified Fraud Examiner (CFE)பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Faculty -Behavioural Sciences(Grade D) - 01

தகுதி: Psychology துறையில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு இணையான அறிவியல் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ படிப்படன் 10 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Fraud Risk Management- Fraud Analyst (Maker) Gr.B - 14

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.



பணி: Fraud Risk Management - Investigator (Checker)Gr.C - 05

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.700, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.idbibank.in/pdf/careers/Recruitment-of-Specialist-Officers.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.



ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2019

Click here to download more details

No comments:

Post a Comment