TNPSC புதிய அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 17, 2019

TNPSC புதிய அறிவிப்பு

அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுகால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இந்த வாரம் வெளியிடுகிறது.

டிஎன்பிஎஸ்சி சாா்பில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்,



அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது தேர்வா்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது.


இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியதாவது:

 2020-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை தயாராகிவிட்டது. இந்த வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.



அதில் 20-க்கும் மேற்பட்ட போட்டித் தோவுகள் இடம்பெறும். தற்போது நடைமுறையில் இருந்து வருவதைப் போன்று தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் காலம், தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் காலம் உள்ளிட்ட விவரங்களை தேர்வா்கள் அறிந்து கொள்ளலாம். காலியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போது தெரிவிக்கப்படும் என்றனா்

No comments:

Post a Comment