10ம் வகுப்பு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு: பிப். 21 - பிப். 28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 30, 2020

10ம் வகுப்பு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு: பிப். 21 - பிப். 28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

10ம் வகுப்பு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 21 முதல் 28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடத்துக்கு மட்டும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய பாடத்திட்டத்தின் கீழ் மார்ச் 27ம் தேதி தொடங்குகிறது.


 இந்நிலையில் பள்ளி சார்ந்த மாணவர்களுக்கு பிப்ரவரி 21 முதல் 28ம் தேதி வரையிலும், தனி தேர்வர்களுக்கு பிப்ரவரி 26 முதல் 28ம் தேதி வரையிலும், ஏதேனும் ஒரு நாளில் செய்முறை பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.


செய்முறை தேர்வுக்கு தேவையான காலி மதிப்பெண் பட்டியல் அடங்கிய கட்டுகள், வருகைப்பதிவேடு தாள் போன்றவற்றை www.dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து அனைத்து பள்ளிகளும் தரவிறக்கம் செய்து, அதில் மாணவர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து, கையெழுத்து பெற்ற பின்னர் செய்முறைத் தேர்வுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதனை தொடர்ந்து மதிப்பெண் பட்டியலை மார்ச் 3ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தனித்தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் பிப்ரவரி 26 முதல் 28 வரை ஏதேனும் ஒரு நாளில் தேர்வு எழுத வேண்டும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


மேலும், எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் உரிய முறையில் செய்முறை தேர்வினை நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment