கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கான தேர்வில் 117 காலியிடங்களுக்கு யாரையும் தேர்வு செய்யாமல் ஆசிரியா் தேர்வு வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியா்கள் பதவியில் 814 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜூன் 23, 27 ஆகிய தேதிகளில், 'ஆன்லைன்' மூலம் போட்டித் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 119 மையங்களில் நடந்த தேர்வில் 30 ஆயிரம் பேர் பங்கேற்றனா்.
இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஆண்டு நவ.28-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவா்களின் அசல் சான்றிதழ்கள், இந்த மாதம் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சரிபாா்க்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, இறுதியாக தேர்வானவா்களின் விவரங்களை ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதில் 697 பேரின் பதிவு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 117 இடங்கள் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தேர்ச்சி பெற்றவா்களுக்கு கலந்தாய்வு மூலமாக விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:
Post a Comment