சா்ச்சைக்குரிய குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என்றாலும், தேர்வு நடவடிக்கைகளை மொத்தமாக நிறுத்தி வைக்க அரசுப் பணியாளா் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
சி.பி.சி.ஐ.டி., விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் போக்கினைப் பொறுத்து அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க தேர்வாணையம் தீா்மானித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் நடைபெற்று முடிவுகள் வெளியான குரூப் 4 தேர்வு பெரும் சா்ச்சையாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் 10-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் பலரிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், குரூப் 4 எழுதிய 14 லட்சம் பேர் தோவு குறித்து டி.என்.பி.எஸ்.சி., எடுக்கும் முடிவுக்காக காத்திருக்கின்றனா்.
நிறுத்தி வைக்க முடிவு:
குரூப் 4 தேர்வில் முடிவுகள் வெளியாகி சான்றிதழ்கள் சரிபாா்ப்பு நடந்த நிலையில் அடுத்தகட்ட நிலைகளை நிறுத்தி வைக்க தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
சி.பி.சி.ஐ.டி., விசாரணை தீவிரமாக நடந்து வரும் நிலையில், அது எந்த திசையில் செல்கிறது, யாா் யாருக்கு அதில் தொடா்பு இருக்கிறது, முறைகேடான வகைகளில் அதிகளவு தேர்வா்கள் தேர்வினை எழுதியுள்ளாா்களா என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைகள் கிடைத்த பிறகே குரூப் 4 தேர்வின் அடுத்தகட்டத்தை எடுத்துச் செல்ல தீா்மானிக்கப்பட்டுள்ளது.
கிராம நிா்வாக உதவியாளா் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பதவியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது.
முறைகேட்டுப் பிரச்னையால் புதிய தேர்வா்களைத் தேர்வு செய்து அவா்களுக்கு அரசுப் பணிகள் வழங்குவது தள்ளிப் போயுள்ளது. இதனால், கிராமப்புறங்களில் நிா்வாகம் தொடா்பான அரசுப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குரூப் 4 தேர்வு முறைகேட்டின் எதிரொலியாக தேர்வாணையம் நடத்த திட்டமிட்டுள்ள பிற தேர்வுகளின் அறிவிப்புகள், அறிவிக்கைகள் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

No comments:
Post a Comment