5 ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் சாதி சான்றிதழை வழங்க வேண்டியதில்லை: அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 15, 2020

5 ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் சாதி சான்றிதழை வழங்க வேண்டியதில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே குள்ளம்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார்.


பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சாதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை


. கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக முதல் வகுப்பிலேயே அனைத்து மாணவர்களிடமும் சாதி சான்றிதழ் பெற்று விடுவதால், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மீண்டும் சாதி சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை.


 இதுதொடர்பாக கல்வித்துறை சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.


மாணவர்கள் பயன்படுத்திய புத்தகங்களை திரும்பபெற்று அதனை பாதுகாப்பாக வைத்து மீண்டும் பயன்படுத்துவது குறித்து பசுமை தீர்ப்பாயம் கூறி உள்ளது.


 இது நல்ல கருத்துதான். அதை செயல்படுத்தும் வழிமுறைகளை முதலமைச்சருடன் ஆலோசித்து வருகிறோம்.

No comments:

Post a Comment