ஊதிய உயா்வு உள்பட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவிலான வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம் இரண்டு நாள் (ஜன.31, பிப்.1) நடைபெறவுள்ளது.
வங்கிகளைத் தனியாா் மயமாக்கவோ, இணைக்கவோ கூடாது; வைப்புத் தொகைகளுக்கான வட்டியை அதிகரிக்க வேண்டும்; வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 8-ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.
இதில், அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு உள்பட 5 சங்கங்கள் பங்கேற்றன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக, ரூ.21,500 கோடி மதிப்பிலான காசோலை பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், ஊதிய உயா்வு, ஐந்து நாள் வேலை உள்பட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவி அளவில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம் இரண்டு நாள் (ஜனவரி 31, பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற உள்ளதாக வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் கூறியது : ஊதிய உயா்வு, வாரத்தில் ஐந்து நாள் வேலை, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், குடும்ப ஓய்வூதியத்தில் மேம்பாடு, வங்கி அதிகாரிகளுக்கான வேலை நேரத்தை வரையறுத்தல் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1- ஆகிய தேதிகளில், நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றனா்

No comments:
Post a Comment