வழக்கு நிலுவையில் இருக்கிறதா? தகவல் சேகரிக்கிறது கல்வித்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 15, 2020

வழக்கு நிலுவையில் இருக்கிறதா? தகவல் சேகரிக்கிறது கல்வித்துறை

கல்வித்துறை தொடர்பாக அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் குறித்த விவரத்தை முதன்மை கல்விஅலுவலர்கள் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது


.இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு, சிறப்பு ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி, ஆசிரியர் பணிநியமனம், கணினி பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. மாவட்ட அளவிலும் பல்வேறு வழக்குகள் பதிவாகி, ஏழு ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது.


இதனால், அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை கல்வித்துறை சந்தித்து வருகிறது. பல திட்டங்கள் உரிய முறையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு போய் சேராத நிலையும் ஏற்படுகிறது


.இவற்றுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், நிலுவை வழக்கு விவரங்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது.மாவட்ட முதன்மை நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம் நடுவர் நீதிமன்றங்களில்


, பிறந்த தேதி மாற்றம், பள்ளி முகவாண்மை வழக்குகள், நிலம் தொடர்பான வழக்குகள், குற்ற வழக்குகள் இருப்பின், அதன் விவரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வரும், 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது

No comments:

Post a Comment