அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 15, 2020

அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மற்றும் மத்திய பல்கலையில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது


.தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலை களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,


 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ,2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது


.இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் குறித்து தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி பயனடையலாம்.என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment