சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 14, 2020

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Assistant Professors, Associate Professors, Professors

காலியிடங்கள்: 32

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகள்: வேதியியல், மானிடவியல், இந்திய வரலாறு, தெற்கு மற்றும் தெற்கு கிழக்கு ஆசிய ஆய்வுகள், கனிம வேதியியல், புவியியல், இந்திய இசை, உளவியல், பொருளாதாரம், தத்துவம், அரசியல் மற்றும் பொதுநிர்வாகம், உயிர் வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறையில் யுஜிசி விதிமுறைப்படி தகுதி பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், அதிகப்படியான கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்குப்படுவர். நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500, மற்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் அல்லது டி.டி.யாக எடுத்து செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, University of Madras, Chepauk, Chennai - 600 005.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.unom.ac.in/webportal/uploads/miscelloneous/appointments/instructions.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.01.2020

No comments:

Post a Comment