பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 13, 2020

பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

நிகழாண்டு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.



தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் நிகழாண்டு 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது.


 இந்தத் தேர்வுகளை அரசு தேர்வுத் துறை நடத்த உள்ளது . நிகழ் கல்வியாண்டில் பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை இதுவரை அரசு தேர்வுத்துறை அறிவிக்கவில்லை .


இந்தக் குழப்பம் காரணமாக அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் அமைப்பினா் , தேர்வுத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனா்.


அப்போது, 'பொதுத்தேர்வை பொருத்தவரை அரையாண்டுத் தேர்வில் , எந்த மாதிரியான வினாத்தாள் இடம் பெற்றதோ, அதே மாதிரியிலேயே பொதுத் தேர்வு வினாத்தாள் இருக்கும்


எனவே , பிற வகை மாதிரி வினாத்தாள்களை பொருட்படுத்த வேண்டாம் . பள்ளிக் கல்வித் துறையின், பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் மாதிரி வினாத்தாளையும் பொருட்படுத்த வேண்டாம்' என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

No comments:

Post a Comment