இன்று முதல் பால் விலை திடீர் உயர்வு: உயர்த்தப்பட்ட கட்டணம் எவ்வளவு? முழு விவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, January 19, 2020

இன்று முதல் பால் விலை திடீர் உயர்வு: உயர்த்தப்பட்ட கட்டணம் எவ்வளவு? முழு விவரம்

தனியார் பால் விலை இன்று முதல் 4 உயர்த்தப்படுகிறது.

இதனால் டீ, காபி பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


 தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84 சதவீதம் தனியார் பால் நிறுவனங்களும் 16 சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் கடந்த ஆண்டு 3 முறை பால் விலையை உயர்த்தியது.


 இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதாகவும், அதன் மொத்த விற்பனையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


 பால் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் ஆரோக்யா, டோட்லா, ஹெரிட்டேஜ் போன்ற பால் நிறுவனங்கள் இன்று முதல் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளது.


பால் விலை லிட்டருக்கு 4 வரையிலும், தயிர் விலை லிட்டருக்கு 2ம் உயர்த்தியுள்ளது.


 சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் 48ல் இருந்து 50 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் 52ல் இருந்து 56 ஆகவும் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 60ல் இருந்து 62 ஆகவும், தயிர் லிட்டர் 58ல் இருந்து 62 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


தனியார் பால் விலை திடீரென உயருவதால் அதனை அதிகமாக பயன்படுத்தும் ஓட்டல்கள், டீ கடைகளில் விலை உயருமோ என்ற அச்சம் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிறிய டீ கடைகளில் ஒரு டீ ₹10க்கு விற்கப்படுகிறது.


 இந்நிலையில் மீண்டும் பால் விலை உயர்வதால் டீ விலை 12 வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளது. தனியார் பால் விலை உயரும் பட்சத்தில் ஆவின் பாலுக்கு மீண்டும் கடுமையான கிராக்கி ஏற்படக்கூடும்.


ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்கும் விலை லிட்டருக்கு 5 முதல் 10 வரை வித்தியாசம் உள்ளது. ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) ஒரு லிட்டர் 47, சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்) 43, செறியூட்டப்பட்ட பால் (ஆரஞ்சு) 51 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 எனவே ஆவின் நிர்வாகம் இதன் மூலம் வாடிக்கையாளர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால் கூடுதலாக ஆவின் பால் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் கூறினர்.

1 comment:

  1. Aavin niruvanam nadavadikkai eduppadhaga ninaithukondu paalil thanneer kalakkaamal irunthal sari.

    ReplyDelete