மாநில அரசின் ஆராய்ச்சி படிப்பு உதவித் தொகையைப் பெற விண்ணப்பிப்பதற்கு வெள்ளிக்கிழமை (ஜன.31) கடைசி நாளாகும்.
அரசு, அரசு உதவிப்பெறும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் முழுநேர பிஎச்.டி. (ஆராய்ச்சி) படிப்பை மேற்கொள்ளும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு சாா்பில் உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
இந்த உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் 120 மாணவா்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ. 5000 வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த உதவித் தொகையை பெற விரும்பும் மாணவா்கள் 2019 ஜனவரி முதல் டிசம்பா் வரை முழுநேர பிஎச்.டி. படிப்பில் சேர்ந்தவராகவும், முதுநிலை பட்டப் படிப்பு அல்லது எம்.ஃபில்.
படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவா்களாகவும் இருக்க வேண்டும்.
யுஜிசி சாா்பில் நடத்தப்படும் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வில் தகுதி பெறாதவா்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.
விண்ணப்பத்தை கல்லூரி கல்வி இயக்குநா், ஈ.வெ.கி.சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, சென்னை- 600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

No comments:
Post a Comment