பெண்கள் அணியும் கண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு ரகசியமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 11, 2020

பெண்கள் அணியும் கண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு ரகசியமா?


காலம் காலமாகவே நம் முன்னோர்கள் பெண்கள் வளையல் அணிந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது என்று கூறி வருகின்றார்கள். அதுவும் சுமங்கலிப் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கையில் கண்டிப்பாக வளையல் அணிந்திருக்க வேண்டும்.


பெண்கள் வளையல் அணிந்து கொள்ளாமல் இருந்தால் அது அமங்கலம் என்பதையும் சாஸ்திரம் கூறுகின்றது. வளையல்களில் எத்தனையோ வகையான வளையல்கள் இருந்தாலும் இந்த கண்ணாடி வளையலுக்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு.

அந்த காலங்களில் எல்லாம் நம் வீடுகள் அமைதியாக இருக்கும் நேரங்களில் பெண்களின் கைகளில் இருக்கும் கண்ணாடி வளையலில் இருந்து வரும் ஒலியானது நம் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொடுக்கும்.

ஆனால், இந்த காலத்தில் சில பெண்கள் கண்ணாடி வளையல் அணியும் பழக்கத்தை குறைத்துக் கொண்டதால், வீட்டில் நேர்மறை ஆற்றல் ஏற்படுவதற்கு கடைகளில் விற்கும், ஒலியெழுப்பும் கருவிகளை வாங்கி தொங்க விடுகிறார்கள்.


பெண்கள் கண்ணாடி வளையலை அணிந்து கொண்டால் இந்த செயற்கையான ஒலியெழுப்பும் கருவிகள் நம் வீட்டிற்கு தேவைப்படாது.

அடுத்ததாக பெண்களுக்கு, கர்ப்ப காலங்களில் வளைகாப்பு நடத்தும்போது ஒரு முக்கிய பங்கு வகிப்பது இந்த வளையல்கள் தான். கர்ப்பிணிப் பெண்களுக்கு நாம் அணிவிக்கப்படும் வளையல் ஒரு காப்பாக, அதாவது கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காகவே அணிவிக்கப்படுகிறது.

இதன் மூலமாகத்தான் இதற்கு வளைகாப்பு என்ற பெயரே வந்தது. இந்த கண்ணாடி வளையலில் இருந்து எழுப்பப்படும் சத்தம் குழந்தைக்கு நேர்மறை ஆற்றலை உண்டாக்குமாம். கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்கிறது

No comments:

Post a Comment