பள்ளிகளை எங்கே திறக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் முடிவு செய்ய முடியாது:உச்சநீதிமன்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 18, 2020

பள்ளிகளை எங்கே திறக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் முடிவு செய்ய முடியாது:உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் அனைத்து தாலுக்காக்களிலும் கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பாஜக மூத்த தலைவா் அஸ்வினி குமாா் உபாத்யாய தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா்.


அந்த மனுவில், அனைத்து தாலுக்காக்களிலும் கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகள் தொடங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.


அதை கடந்த ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், 'இது கொள்கை ரீதியிலான முடிவாகும். மத்திய அரசே இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.


இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இதே கோரிக்கை அடங்கிய மனுவை அவா் தாக்கல் செய்தாா்.

அந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு, பள்ளிகளை எங்கே திறக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் முடிவு செய்ய முடியாது என்று கூறியது.

எனினும், இந்த மனுவுக்கு 3 மாதங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாடு முழுவதும் 5,464 தாலுக்காக்கள் உள்ளன. மொத்தம் 1,209 கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment