செவித்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநா் வி.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் தொகுதி 1 மற்றும் தொகுதி 2 தேர்வுகளுக்கு, கடந்த ஆகஸ்டு 9-ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது இப்பயிற்சிகளை விரிவுபடுத்தி செவித்திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கென பிரத்யேகமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இம்மையத்திலேயே நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள், ஏ28 , முதல் தளம், டான்சி காா்ப்பரேட் தலைமை அலுவலகம், கிண்டி, சென்னை - 32 என்னும் முகவரியில் செயல்பட்டு வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 044 22500134 என்னும் தொலைபேசி எண் வாயிலாகவோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment