பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, February 18, 2020

பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் வெளியீடு

பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.


இதற்கான முன்னேற்பாடுகள் முடிந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெறுகின்றன.

இந்நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன.  10ஆம் வகுப்பில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 பேரும், 11ஆம் வகுப்பில், 8 லட்சத்து 26ஆயிரத்து 82 மாணவர்களும், 12ஆம் வகுப்பில், 8 லட்சத்து 16ஆயிரத்து 358 பேரும் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.


கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் கூடுதலாக 10ஆம் வகுப்பில் 23 ஆயிரத்து, 230 பேரும், 12 ஆம் வகுப்பில் 39 ஆயிரத்து 164 பேரும் தேர்வு எழுதுகின்றனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ், இந்தாண்டு, 10,12 ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment