தனியார் பள்ளிகளில் இரவு 10 மணிக்கு மேல் நடக்கும் சிறப்பு வகுப்புகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 21, 2020

தனியார் பள்ளிகளில் இரவு 10 மணிக்கு மேல் நடக்கும் சிறப்பு வகுப்புகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளில் இரவு 10 மணிக்கு மேல் நடக்கும் சிறப்பு வகுப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்


. கோபியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டிய நிலை இல்லை.

ஏனென்றால், கடந்தாண்டு பொதுத்தேர்வு வந்தபோது அனைவரும் அச்சம் அடைந்தனர். ஆனால், தேர்வில் 97 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தனியார் பள்ளிகளில் இரவு 10 மணிக்கு நடைபெறும் சிறப்பு வகுப்புகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


நீட் தேர்வுக்கு தேவையான பாடங்கள் 12ம் வகுப்பு பாடப்புத்தகத்திலேயே உள்ளது. பொதுத்தேர்வு முடிந்தவுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தொடர்பாக முழு பயிற்சி அளிக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மகிழ்ச்சியோடு வாருங்கள். மன அழுத்தத்தோடு வராதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment