ரூ.14,000 - 47,500 சம்பளத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் வேலை மொத்த காலியிடங்கள்: 36 - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 23, 2020

ரூ.14,000 - 47,500 சம்பளத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் வேலை மொத்த காலியிடங்கள்: 36


திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: திருவள்ளூர் கூட்டுறவு வங்கி

மொத்த காலியிடங்கள்: 36

பணி: உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.14,000 - 47,500 + இதர படிகள்

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறநாளிகள், ஆதரவற்ற விதைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கும் முறை: www.tvldrb.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இனச் சுழற்சி முறை, அவர்கள் தெரிவித்த முன்னரிமை விருப்பச் சங்க வகை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.04.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.03.2020


Click here to download

No comments:

Post a Comment