ஏப்ரல் 15 முதல் 25ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்: 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, February 15, 2020

ஏப்ரல் 15 முதல் 25ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்: 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்

 வரும் ஏப்ரல் 15 முதல் 25ம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.



 சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் சார்பில், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி திறந்தவெளி மைதானத்தில், ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.


இந்த முகாமில், சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை, சிப்பாய் எழுத்தர் மற்றும் ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணிகளுக்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


 இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் பதினேழரை வயது முதல் அதிகபட்சம் 23 வயது வரை வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில், சென்னை ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநர் கர்னல் தருண், டிஆர்ஓ ரத்தினசாமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


பின்னர் கலெக்டர் ேக.எஸ்.கந்தசாமி கூறியதாவது: ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் வரும் மார்ச் 1 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த நபர்களுக்கு மட்டுேம அனுமதி அளிக்கப்படும். அனுமதி அட்டையை இணையளத்தில் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். நடைமுறைகள் அனைத்தும் தானியங்கி செயல்படாகும். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், குடியுரிமை, சாதி மற்றும் பிறப்பு சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.


1.6 கி.மீ. தூரம் ஓட்டம், 9 அடி கால்வாய் தாவுதல், புல் அப், ஜிக் ஜாக் பேலன்ஸ் ஆகிய உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படும்.  அதைத்தொடர்ந்து, உடல் அளவீடுகளுக்கான தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். ஆட்சேர்ப்பு முகாமில் தகுதி பெறும் இளைஞர்கள் மட்டும், சென்னை மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அலுவலகம் நடத்தும் பொது நுழைவுத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான, இடம், தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment