ரூ.25,500 - 81,100 சம்பளத்தில் அஞ்சல் துறையில் இளநிலை கணக்காளர் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 16, 2020

ரூ.25,500 - 81,100 சம்பளத்தில் அஞ்சல் துறையில் இளநிலை கணக்காளர் வேலை


இந்திய அஞ்சல் துறையின் கர்நாடகம் அஞ்சல் வட்டத்தில் உள்ள காலியாக உள்ள 46 இளநிலை கணக்காளர், அஞ்சல் உதவியாளர் போன்ற பணியிடங்களை விளையாட்டு வீரர்களைக் கொண்டு நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 46

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Accountant (JA) in Postal Accounts Office - 02
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: Postal Assistant (PA) in Post Offices or Administrative Offices -11
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: Sorting Assistant (SA)in Railway Mal Offices - 04
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: Postman (PM) in Post Offices - 27
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், இளங்கலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். குறைந்தது 10 ஆம் வகுப்பு வரையில் கன்னட மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதிகள் அடிப்படையில் தேர்வு பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்தணை அட்டைகள் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.karnatakapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2020

Click here to download

No comments:

Post a Comment