பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, February 22, 2020

பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் பிப்.26-ஆம் தேதி புதன்கிழமை முதல் பிப்.28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன.


அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.

 உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment