தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.
சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்தவர்கள், சிறப்பு அனுமதி திட்டம் என்னும் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களும் இன்று மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளை எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் வழங்கப்படும்.
ஏற்கனவே தேர்வு எழுதி எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று செய்முறைத் தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும்.
அவர்கள் எழுத்து தேர்வு எழுத வேண்டியதில்லை.ஏற்கனவே செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்று தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது எழுத்து தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகியவற்றை கட்டாயம் எழுத வேண்டும்.

No comments:
Post a Comment