தமிழ்நாட்டில் 3ல் 1 பங்கு அரசு நடுநிலை பள்ளிகளில் பாட ஆசிரியர்கள் இல்லை : மத்திய அரசு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 19, 2020

தமிழ்நாட்டில் 3ல் 1 பங்கு அரசு நடுநிலை பள்ளிகளில் பாட ஆசிரியர்கள் இல்லை : மத்திய அரசு

தமிழ்நாட்டில் உள்ள 3ல் 1 பங்கு அரசு நடுநிலை பள்ளிகளில் பாட ஆசிரியர்கள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



 மத்திய அரசின் சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் ஒப்புதல் குழு கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பாட ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.


அரசு பள்ளிகளுக்கான கல்வி தர நிர்ணய பட்டியலில் மொத்தம் 180 புள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் வெறும் 48 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளன.


நடுநிலை பள்ளிகளில் 33% அளவிற்கு பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததே இதற்கு காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 6,966 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.

அதில் 8.46 லட்சம் மாணவர்கள் பயின்றுப வருகின்றனர். ஆனால் நடுநிலை பள்ளிகளில் 1 தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர் என்பது ஆசிரியர்களின் புகாராகும்.



5 பாடங்களையும் 3 ஆசிரியர்களே கையாள்வதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.


பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர்களை குறைத்து வருவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 31 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் தேவை என்பது இவர்களின் கோரிக்கையாகும்

No comments:

Post a Comment