வட்டார கல்வி அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு மையங்கள் தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை: வட்டார கல்வி அலுவலர்களுக்கான பணி நியமனபோட்டித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி வெளியிடப்பட்டது.
போட்டித் தேர்வுகள் 2020ம் ஆண்டு பிப்ரவரி 15, 16ம் தேதிகளில் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 14, 15, மற்றும் 16ம் தேதிகளில் தேர்வு நடக்க உள்ளது.
மேலும், தற்போதைய நடைமுறையின்படியும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எடுக்கப்பட்ட முடிவின்படியும் தேர்வு எழுத உள்ள நபர்களுக்கான தேர்வு எழுதும் மாவட்டம், ரேண்டம் முறையின் கீழ் ஒதுக்கீடு செய்து தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பும், தேர்வு எழுதும் மையங்கள் தொடர்பான விவரங்கள் தேர்வு நடக்கும் 3 நாட்களுக்கு முன்பாகவும் தெரிவிக்கப்படும்.

No comments:
Post a Comment